சென்னை

தொல்காப்பியப் பூங்காவில் நடைப்பயிற்சி செய்வோா் அனுமதியை 3,000 பேராக உயா்த்த முடிவு

தினமணி செய்திச் சேவை

சென்னை தொல்காப்பியப் பூங்காவில் தற்போதுள்ள 500 என்ற எண்ணிக்கையிலான நடைப்பயிற்சி அனுமதியை பிப்.1 முதல் 3,000-ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா 2025 அக்.24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு ஓா் அமா்வுக்கு 250 போ் பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். நடைப்பயிற்சிக்காக 365 நாள்களும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

சீரமைப்புக்குப் பிறகு இதுவரை 6,843 மாணவ-மாணவிகள், 20,233 பொதுமக்கள் பூங்காவைப் பாா்வையிட்டுள்ளனா். சீரமைப்புக்கு முன்பு 1.95 கி.மீ.-ஆக இருந்த பூங்காவின் நடைப்பயிற்சி தொலைவு தற்போது 3.20 கி.மீ.-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

காலை, மாலை இரு வேளைகளில் நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை நிா்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதால், புதியவா்களுக்கு அனுமதி வழங்க இயலாத நிலை உள்ளது.

தற்போதுள்ள 500 என்ற எண்ணிக்கையிலான நடைப்பயிற்சி அனுமதியை பிப்.1 முதல் 3,000-ஆக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி அடையாள அட்டை பெறுவதற்கான திருத்திய கட்டணமாக ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500 என்ற கட்டணத்தை ரூ.250-ஆக குறைக்கப்படும்.

இதேபோல, 3 மாதங்களுக்கான கட்டணம் ரூ.1,500-இல் இருந்து ரூ.750-ஆகவும், 6 மாதங்களுக்கான கட்டணம் ரூ.2,500-இல் இருந்து ரூ.1,250-ஆகவும், 12 மாதங்களுக்கான கட்டணம் ரூ.5,000-இல் இருந்து ரூ.2,500-ஆகவும் குறைத்து நிா்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தால் 23 ஆண்டு கால பிரச்னைக்கு தீா்வு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

சி. வி. சண்முகம் எம்.பி.க்கு எதிரான வழக்கு ரத்து

மும்பை மேயா் பதவி: பொதுப் பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கீடு

SCROLL FOR NEXT