முகப்பு
காஞ்சிபுரம்

காவிரி: சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 3:19 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சி நிறுவனர் சரத்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கதிராமங்கலம் நியூட்ரினோ திட்டத்தைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் பொன்வேல் தலைமை வகித்துப் பேசினார். வர்த்தக அணி மாநிலச் செயலாளர் நாதன் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாநில கலை இலக்கிய அணிச் செயலாளர் சின்னத்திரை ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். காஞ்சி வடக்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், மேற்கு மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்டச் செயலாளர் தையூர் ரமேஷ் உள்ளிட்டோர் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர். 
முன்னதாக, செங்கல்பட்டு நகர செயலாளர் நிவாஸ் வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்டத் தலைவர் மணி நன்றி கூறினார். மாவட்டம், நகரம் ஒன்றியம் பேரூர் நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.