காஞ்சிபுரம்

பாலேஸ்வரம் கருணை இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும்: கள ஆய்வுக் குழுவினர் கோரிக்கை

DIN

பாலேஸ்வரம் கருணை இல்லப் பிரச்னைக்கு அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம், அந்த இல்லத்தை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தொண்டு நிறுவன கள ஆய்வுக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள பாலேஸ்வரம் கருணை இல்லத்துக்கு மக்கள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனம் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஜவாஹிருல்லா, எழுத்தாளர்கள் தியாகு, மார்க்ஸ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட உயர்நிலை களஆய்வுக்குழுவினர்கள் புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். 
அதன்பிறகு, காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: 
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் உள்ளோருக்கு யாருமே செய்யாத வகையில், சிறந்த சேவை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், யூகங்கள், புரளிகள், பொய்யான குற்றச்சாட்டுகளால் கருணை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை அரசு அதிகாரிகள் அத்துமீறி வேறு இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், இல்ல நிர்வாகி பாதிரியார் தாமஸ் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பித்தும் அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. 
இதேபோன்று அடக்கம் செய்யும் முறைக்கு அரசிடம் வழிகாட்டல், விதிமுறைகள் இல்லை. இறக்கும் தருவாயில் உள்ளோர் இறந்த பிறகு அடக்கம் செய்யும் முறைக்கு அரசு உரிய அனுமதி வழங்கவேண்டும். 
அதன்பிறகு, கருணை இல்லத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே அனுமதித்த பிறகு, ஏன் மீண்டும் அனுமதி வழங்கவில்லை. 
பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் சேர்க்கப்படுவோர் காவல் துறை, மருத்துவமனை, அரசு அதிகாரிகள் உதவியோடுதான் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட ஆய்வில், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால்தான் கருணை இல்லப் பிரச்னை எழுந்துள்ளது என களஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறாமல் களஆய்வுக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பை நிறைவு செய்து கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT