முகப்பு
காஞ்சிபுரம்

திருவோத்தூர் திருப்பதிகம் நூல் வெளியீட்டு விழா

காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் சார்பில் திருவோத்தூர் திருப்பதிகம் என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On : 9 அக்டோபர் 2018, 4:18 am IST
பகிர்:


காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் சார்பில் திருவோத்தூர் திருப்பதிகம் என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த அமைப்பின் 47ஆவது ஆண்டு நிறைவு விழா காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் திருவேகம்பமுடையான் தலைமை வகித்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் சிப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருவோத்தூர் திருப்பதிகம் என்ற நூலை வெளியிட்டார். 
அதை, சிவனடியார் திருக்கூட்டம் அமைப்பின் துணைத் தலைவர் பூவேந்தன் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில், சரவணபவாநந்த தேசிகன், கவிஞர்கள் ஜெனாதட்சின், கூரம் துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.