சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற விநாயகர்.(வலது) சந்தனக் காப்பு அலங்காரத்தில் விநாயகர். 
காஞ்சிபுரம்

செல்வவிநாயகர் கோயிலில் சமுத்திர சங்கம விழா

மாமல்லபுரம் அண்ணா நகர் செல்வவிநாயகர் கோயிலில் சமுத்திர சங்கம விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

DIN


மாமல்லபுரம் அண்ணா நகர் செல்வவிநாயகர் கோயிலில் சமுத்திர சங்கம விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இக்கோயிலில் 32ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த 2ஆம் தேதி செல்வவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. 
தொடர்ந்து நாள்தோறும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை மகா தீபாராதனை, அன்னதானம், மாலை மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், இரவு உற்சவர் சிறப்பு அலங்கார வீதி உலா நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை செல்வ விநாயகருக்கு  அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
இதைத் தொடர்ந்து புதன்கிழமை காலை மகா அபிஷேகம், மாலை சுவாமி வீதி உலாவுடன் சமுத்திர சங்கமம் வழிபாடு நடைபெற உள்ளது.  விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT