காஞ்சிபுரம்

சித்தியுடன் இணையும் வரலட்சுமி சரத்குமாரின் புதிய படம்!

முற்றிலும் குடும்பப் பின்னணியில் எடுக்கப்படவிருக்கும் இத்திரைப்படத்தில் டைட்டில் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். படம் குறித்த தகவலைப் பகிரும் போது, படத்தை இயக்கவிருப்பது ஓம் விஜய்

சரோஜினி

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன் தந்தை சரத்குமார் மற்றும் சித்தி ராதிகாவுடன் இணைந்து நடிக்கப் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்திற்கான டீஸர் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்த  தகவல்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படத்தின் பெயர் ‘ பிறந்தாள் பராசக்தி’ இதில் ராதிகா மற்றும் சரத்குமாருடன் இணைந்து வரலட்சுமி நடிக்கிறார். முற்றிலும் குடும்பப் பின்னணியில் எடுக்கப்படவிருக்கும் இத்திரைப்படத்தில் டைட்டில் ரோலில் வரலட்சுமி நடிக்கிறார். படம் குறித்த தகவலைப் பகிரும் போது, படத்தை இயக்கவிருப்பது ஓம் விஜய் என்றும் தயாரிக்கவிருப்பது ராதிகாவின் ராடன் பிக்ஸர்ஸ் நிறுவனம் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு இது முற்றிலும் புதிய அனுபவம் மட்டுமல்ல, மிக சந்தோஷமான நினைவுகளைத் தரக்கூடிய படமாகவும் இத்திரைப்படம் அமைந்திருப்பதாக வரலட்சுமி ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

ராதிகா மற்றும் சரத்துடன் இணையும் வரலட்சுமி சரத்தின் புதிய டீஸர்...

நடிகர் விஷாலுடனான நட்பால் தந்தை, மகள் உறவில் விரிசல். கடந்த நடிகர் சங்கத் தேர்தல் சமயத்தில் ராதிகா குழுவினரை எதிர்த்த வகையில் சித்தியுடனும் சுமூகமான உறவின்மை என இருந்த கருத்து வேறுபாடுகள் நிறைந்த இவர்களது உறவு வரவிருக்கும் ‘பிறந்தாள் பராசக்தி’ திரைப்படம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராடன் தயாரிக்கும் நாயகி மையைத் திரைப்படங்களில் இனி வரலட்சுமி சரத்தைக் காண முடியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT