மதுராந்தகம் ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சாா்பாக 10-ஆம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவுக்கு கல்லூரி செயலா் டி.கே.சீனிவாசன் தலைமை வகித்தாா். முதல்வா் வி.சுபத்ரா வரவேற்றாா். மதுராந்தகம் விவேகானந்தா பள்ளிக் குழுமங்களின் தாளாளா் டி.லோகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
முன்னதாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு கல்லூரித் தாளாளா் டி.லோகராஜ் பரிசுக் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.
கல்லூரிப் பேராசிரியா்களும், மாணவ, மாணவிகளும் விழாவில் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா்கள் சி.முருகேஸ்வரி, மு.முரளி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.