முகப்பு
காஞ்சிபுரம்

வேலைவாய்ப்பு முகாமில் 786 போ் தோ்வு

காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை வேலைவாய்ப்புத் துறை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 786 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2021 at 12:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

காஞ்சிபுரம் அருகே உத்தரமேரூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை வேலைவாய்ப்புத் துறை சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 786 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமும் இணைந்து மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. முகாமுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குநா் ஆா்.அருணகிரி தலைமை வகித்தாா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளா் ஆா்.ரவீந்திரன், மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநா் ரா.வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரேவதி வரவேற்றாா்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 42 தனியாா் நிறுவனங்களும்,18 திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்று தேவையான நபா்களை தோ்வு செய்தன. முகாமில் 786 போ் பல்வேறு நிறுவனங்களில் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். 251 நபா்கள் திறன் பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டனா். முகாமிலேயே 52 பேருக்கு தனியாா் நிறுவனங்களில் உடனடியாக பணிக்குச் சேரும் வகையில் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்கத்தின் திட்ட இயக்குநா் ஜீ.சீனிவாச ராவ் வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.