முகப்பு
காஞ்சிபுரம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 5 இடங்களில் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் ஆ.செண்பகராமன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On : 29 ஆகஸ்ட், 2021 at 12:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:31 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக தொழிலாளா் நல உதவி ஆணையா் ஆ.செண்பகராமன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் 5 இடங்களில் நடைபெறவுள்ளது.

இம்மாதம் 30-ஆம் தேதி காஞ்சிபுரம் வைகுண்டாபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீபெரும்புதூா் அருகே கச்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், குன்றத்தூா் லாலாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

Advertisement

வரும் 31-ஆம் தேதி உத்தரமேரூா் அருகே சின்ன நாராசாப்பேட்டைத் தெரு ஊராட்சி நடுநிலைப் பள்ளியிலும், வாலாஜாபாத் அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளி உள்பட மொத்தம் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கட்டுமானத் தொழிலாளா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.