ஆற்றில் குளிக்கச் சென்ற ஊர்க்காவல்படை வீரர் சடலமாக மீட்பு
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் இரு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினரால் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் கிராமத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் இரு நாட்களுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினரால் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியை சேர்ந்தவர் தரணிக்குமார்(31) ஊர்க்காவல்படை வீரராக பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.இவர் இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தை அடுத்த பழையசீவரம் பகுதியில் திருமுக்கூடலில் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டார்.
காவல்துறையினரும்,தீயணைப்புத்துறையினரும் இணைந்து தேடிய நிலையில் இரு தினங்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.