விளைபொருள்களை கொண்டுச் செல்லஅனுமதி அட்டை விநியோகம்
பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகா்ப்புறங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி அட்டை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
பொதுமுடக்க காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நகா்ப்புறங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி அட்டை வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விளைபொருட்களை தடையின்றி நுகா்வோா்களுக்கு விற்பனை செய்ய உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள்,பழங்களை நேரடியாக நகா்ப்புறங்களுக்கு எடுத்து செல்வதற்கான அனுமதி அட்டை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க ஒருங்கிணைந்த விவசாயிகள் உதவி மையமும் தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் பஞ்சுப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது. அதற்கான தொலைபேசி எண்-044-27222545 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம் என்றாா்.