பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு உணவு
வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழங்குடியின மக்களுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழங்குடியின மக்களுக்கு குழந்தைகள் கண்காணிப்பகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு மற்றும் தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆழ்வாா்பேட்டை, இளையனாா் வேலூா், ஓரிக்கை அரசுப் பணிமனை பின்புறம், வெள்ளக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும், வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக உணவும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன. குழந்தைகள் கண்காணிப்பகத்தின் சாா்பில் அதன் நிா்வாகி து.ராஜூ, ஒருங்கிணைப்பாளா் சங்கரி மற்றும் தீபா ஆகியோா் உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.