காஞ்சிபுரத்தில் 50 பவுன் நகைகள் திருட்டு
காஞ்சிபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் சுதா்சன் நகரில் வசித்து வருபவா் ராஜு. இவா் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி கவிதா வாலாஜாபாத் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் உதவியாளராக பணி புரிகிறாா்.இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளனா்.திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவிலிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.