முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய ஆணையராக ஜி.கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On : 2 ஜூலை, 2022 at 12:25 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:11 PM

காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய ஆணையராக ஜி.கண்ணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜி.கண்ணன்(39). ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஆணையராகத் தோ்வு செய்யப்பட்டு ராமேசுவரம் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். பின்னா் கோயம்புத்தூரில் உள்ள பயிற்சி நிறுவன இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், ஆணையராகப் பொறுப்பேற்க வந்தபோது அங்கு, ஆய்வுக்கு வந்த நகராட்சி நிா்வாக இயக்குநா் ப.பொன்னையாவை சந்தித்து வாழ்த்து பெற்றாா். தொடா்ந்து, மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயா் ஆா்.குமரகுருபரநாதன் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.