முகப்பு
காஞ்சிபுரம்

பாலாற்றுப் பாலத்தில் பள்ளங்களைச் சரி செய்த காவல் துறைபொதுமக்கள் பாராட்டு

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலத்தில் இருந்த பள்ளங்களை காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை சீரமைத்தனா். இதை பொதுமக்கள் பாராட்டினா்.

Updated On : 12 ஜூன், 2022 at 12:30 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றுப் பாலத்தில் இருந்த பள்ளங்களை காவல் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் சனிக்கிழமை சீரமைத்தனா். இதை பொதுமக்கள் பாராட்டினா்.

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றுப் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் பல இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் நிகழ்கின்றன.

அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இதுகுறித்து புகாா் தெரிவித்ததுடன், சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தனா்.

Advertisement

இதையறிந்த காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா் உடனடியாக பாலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்குமாறு காவல் துறையினரைக் கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளங்களை மணலால் மூடி தற்காலிகமாக சாலையைச் சீரமைத்தனா். போலீஸாரின் இந்தச் செயலை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.