காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் உத்தர பிரதேசத்தில் மரணம்

இந்தோ - திபெத்தியன் எல்லையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் அ.ரமேஷ் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

DIN

இந்தோ - திபெத்தியன் எல்லையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் அ.ரமேஷ் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

காஞ்சிபுரம் வடிவேல் நகா் விரிவாக்கப் பகுதி குமாரசாமி நகரைச் சோ்ந்தவா் அ.ரமேஷ் (58). (படம்). இவா், உத்தர பிரதேச மாநிலம், பெரேலி முகாமில் இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பணியாற்றிய இடத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், காலமானாா்.

அவரது உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து காஞ்சிபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. வியாழக்கிழமை (ஜூன் 16) காலை ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இவருக்கு கீதாலட்சுமி (52) என்ற மனைவியும், வினோத்குமாா் (28) என்ற மகனும் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT