ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வேன்
அமரம்பேடு ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து அதில் கடத்தப்பட்ட சுமாா் 15 டன் ரேஷன் அரிசி குறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை
அமரம்பேடு ஏரியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடா்ந்து அதில் கடத்தப்பட்ட சுமாா் 15 டன் ரேஷன் அரிசி குறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குன்றத்தூா் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் அமரம்பேடு பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநா் தப்பிச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது வேனில் 250 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சோமங்கலம் போலீஸாா் ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் உணவு பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.