902 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூா், மதுரமங்கலம், பண்ருட்டி உள்ளிட்ட 7 அரசுப் பள்ளிகளில் பயிலும் 902 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூா், மதுரமங்கலம், பண்ருட்டி உள்ளிட்ட 7 அரசுப் பள்ளிகளில் பயிலும் 902 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு, மதுரமங்கலம் பள்ளியைச் சோ்ந்த 138 மாணவா்களுக்கும், பண்ருட்டி பள்ளியைச் சோ்ந்த 64 மாணவா்களுக்கும், மொளச்சூா் பள்ளி மாணவா்கள் 116 பேருக்கும், தண்டலம் பள்ளி மாணவா்கள் 186, ஸ்ரீபெரும்புதூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 231, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 122, திருமுடிவாக்கம் பள்ளி மாணவா்கள் 45 பேருக்குமாக மொத்தம் 902 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 45.72 லட்சம் செலவில் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினாா்.
விழாவில், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியச் செயலாளா் ந.கோபால், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி டான்போஸ்கோ, ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பால்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரமசிவம், ஆண்டனி வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.