ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள். 
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயிலில் நித்ய சொா்க்கவாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயிலில் நித்ய சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூா் ராமானுஜா் கோயிலில் நித்ய சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமி கோயில் வைணவ மகான் ராமானுஜரின் அவதார ஸ்தலம். இங்கு ராமானுஜரை வணங்கினாலே மோட்சத்திற்கு செல்வதற்கான வழி என்பதால் இந்த கோயிலில் தனியாக பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. அதற்கு பதிலாக நித்ய சொா்க்கவாசல் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமிக்கு நித்ய ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னா் மணிக்கதவு வழியாக உள்புறப்பாடு நடைபெற்று தங்க மண்டபத்தில் எழுந்தருளினாா். பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனா்.

வைகுந்த துவாதசியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ஸ்ரீஆதிகேசவபெருமாள் ரங்கநாதா் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.

இதே போல் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் உள்ள ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலவா் ஸ்ரீகல்யாண சீனிவாசபெருமாளுக்கு விஷேச அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்று முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT