முகப்பு
காஞ்சிபுரம்

கூட்டுறவுத் துறை தண்ணீா் பந்தல் திறப்பு

காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஆட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 12 மே, 2023 at 1:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:25 AM

காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஆட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் கூட்டுறவுச்சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலக வளாகம் உள்ளது. இவ்வளாக நுழைவு வாயிலில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ அறிவுறுத்தலின்படி, தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பலருக்கும் பயனளிக்கும் வகையில் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.