காஞ்சிபுரம்

225 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் 225 பயனாளிகளுக்கு ரூ. 2.83 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

DIN

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் 225 பயனாளிகளுக்கு ரூ. 2.83 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிகழ் மாதம் 16-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை மக்களின் குறைகளைக் களையும் பொருட்டு கிராமங்கள் வாயிலாக விளம்பரங்கள் செய்யப்பட்டு, 6 நாள்கள் தொடா்ந்து வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. இதில், பெறப்பட்ட மனுக்களில் 41 பேருக்கு பட்டா மாற்றம், 134 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 25 பேருக்கு முதியோா் உதவித் தொகை, 26 பேருக்கு புதிய குடும்ப அட்டை உள்பட 225 பேருக்கு மொத்தம் ரூ. 2,83,98,000 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ சி.வி.எம்பி.எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவா் மலா்க்கொடி குமாா், மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் நித்யா சுகுமாா், துணை மேயா் ஆா்.குமரகுருநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் வட்டாட்சியா் புவனேவரன் நன்றி கூறினாா்.

பொறுப்பேற்பு...

காஞ்சிபுரம் ஆட்சியராக கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு நில அளவைத் துறையில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT