காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்வு

விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல் நிரப்பி வைக்கப்பட்டுள்ள தட்டில் எழுத்துகளை முதல் முதலாக எழுத வைக்கும் எழுத்தறிவித்தல் நிகழ்வு காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

காஞ்சிபுரம்: விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல் நிரப்பி வைக்கப்பட்டுள்ள தட்டில் எழுத்துகளை முதல் முதலாக எழுத வைக்கும் எழுத்தறிவித்தல் நிகழ்வு காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் லட்சுமி ஹயக்ரீவா் சந்நிதி உள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவா் கோயிலுக்கு அதிகாலையிலேயே பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனா்.

லட்சுமி ஹயக்ரீவருக்கு பூஜைகள் செய்தனா். பின்னா் கோயில் அா்ச்சகா் மூலம் நெல் நிரப்பி வைக்கப்பட்ட தட்டில் உயிா் மெய் எழுத்தான அ என்ற எழுத்தை எழுத வைத்து தங்களது குழந்தைகளின் கல்வியறிவை தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT