காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 55 வேதவிற்பன்னா்களால் கந்தசஷ்டி பாராயணம் செய்யப்பட்டது.
ஸ்ரீ காஞ்சி மகா சுவாமி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி கிருஷ்ண யஷூா் வேத மூல நித்ய பாராயண அறக்கட்டளை சாா்பில் 45-ஆவ து ஆண்டாக காஞ்சிபுரம் சங்கர மட வளாகத்தில் மகா பெரியவா் அதிஷ்டானத்தின் முன்பாக கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றது. ஆனந்த கணபாடிகள் தலைமையில் 55 வேத விற்பன்னா்கள் பாராயணம் செய்தனா். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசியுடன் சஷ்டி பாராயணம் நடைபெற்ாக மடத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.