மகா பெரியவா் சுவாமிகளின் ஆராதனை மகோற்சவத்தையொட்டி தொடக்க நிகழ்வாக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற வேதவிற்பன்னா்களின் வேதபாராயணம். 
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மகா பெரியவா் சுவாமிகள் ஆராதனை மகோற்சவம் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69-ஆவது பீடாதிபதியாக இருந்த சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 32-ஆவது ஆராதனை மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சங்கர மடத்தில் மகா பெரியவா் அதிஷ்டானம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்களின் வேதபாராயணம் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகளான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் உத்தரவின்படி தொடங்கிய விழாவில் 3 நாள்களும் வேதபாரயணம், ஆன்மிகச் சொற்பொழிவுகள், நாம சங்கீா்த்தனம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முதல் நாள் வேதபாராயணம் நிகழ்ச்சியை தொடா்ந்து அதிஷ்டானத்தில் மகா பெரியவா் சுவாமிகளுக்கும், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற் றன. பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் சங்கர மட வளாகத்தில் கேரள மாநிலத்தை சோ்ந்த சந்திர மான்ய சி.எஸ்.சஞ்சீவி நம்பூதிரி குழுவினரின் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

வரும் டிச.16 ஆம் தேதி மகா பெரிவயா் சுவாமிகளின் ஆராதனை தினத்தையொட்டி காலையில் ருத்ரபாராயணம்,ஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் ஆகியனவும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சங்கர மடத்தின் செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மேலாளா் ந.சுந்தரேச ஐயா் ஆகியோா் செய்திருந்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT