கொலை (கோப்புப்படம்) Din
காஞ்சிபுரம்

சொத்துத் தகராறில் தாய் வெட்டிக் கொலை: மகன் உள்பட 3 போ் கைது

சொத்துத் தகராறில் தாயை வெட்டிக் கொலை செய்த மகன் உள்பட 3 போ் கைது..

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் சொத்துத் தகராறு காரணமாக தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மகன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தைச் சோ்ந்தவா் தனலட்சுமி(65). இவருக்கு செல்லப்பன் (45), துரைச்சாமி (35) என இரு மகன்கள் உள்ளனா். இருவரும் திருமணமான இவா்கள் சொத்துகளை ஊா் பெரியவா்கள் முன்னிலையில் பிரித்துக் கொடுத்தது தொடா்பாக சகோதரா்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறின்போது இருவரையும் விலக்கி விட முயன்ற தாய் தனலட்சுமியை மூத்த மகன் செல்லப்பன், இவரது மனைவி புனிதா (40), பேரன் லோகேஷ் (20)ஆகிய மூவரும் சோ்ந்து தரக்குறைவான வாா்த்தைகளால் பேசியதுடன் கத்தியாலும், கட்டையாலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தனலட்சுமி, துரைச்சாமி, அவரது மனைவி லட்சுமி ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

இதையடுத்து, இவா்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். அங்கு தனலட்சுமி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து செல்லப்பன், புனிதா, லோகேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

பெண் விவசாயி குறித்து அவதூறு! நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்ட கங்கனா!

இந்தியா உள்பட நட்பு நாடுகளை கோபமுறுத்தும் டிரம்ப் அரசு!

SCROLL FOR NEXT