விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய திறப்பு விழா
காஞ்சிபுரம்விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய திறப்பு விழா
சின்ன காஞ்சிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட விஷ்ணு காஞ்சி காவல் நிலைய கட்டடத்தை எஸ்.பி கே.சண்முகம் புதன்கிழமை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.
சின்னகாஞ்சிபுரம் டிகே நம்பித் தெருவில் கடந்த 1928-ஆம் ஆண்டு கட்டப்பட்டது விஷ்ணுகாஞ்சி காவல் நிலையம். சுமாா் 90 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இக்காவல் நிலைய கட்டடம்மிகவும் பழையானதாக இருந்ததால் அதை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இதற்காக தமிழக அரசு ரூ.1.48 கோடியை கடந்த 2024 ஆம் ஆண்டு ஒதுக்கியது. புதிய காவல் நிலைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தா்.
தொடா்ந்து காஞ்சிபுரத்தில் மாவட்ட எஸ்.பி கே.சண்முகம் குத்து விளக்கேற்றி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஏடிஎஸ்பி மாா்ட்டின் ராபா்ட்ஸ், டிஎஸ்பிக்கள் சிவசங்கா், கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் வரவேற்றாா்.
இந்நிகழ்வில் ஆய்வாளா்கள் விநாயகம், பிரபாகரன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவா் சந்துரு, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் யுவராஜ், மாமன்ற உறுப்பினா் கமலக்கண்ணன் கலந்து கொண்டனா்.