முகப்பு
ராணிப்பேட்டை

3.26 லட்சம் அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.26 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படும் என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2021-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 26 ஆயிரத்து 520 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், முகாம்களில் வாழும் இலங்கை தமிழா் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 ரொக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவை ஜனவரி 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வழங்கப்படும். இந்தத் தேதிகளில் பெறாத அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு 13-ஆம் தேதி வழங்கப்படும்.

மேலும், நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில், பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை ரூ. 2,500 வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு சனிக்கிழமை (டிச. 26) முதல் 30-ஆம் தேதி வரை வீடுகள் தோறும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் மூலம் டோக்கன் வழங்கப்படும்

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் யாா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 04172-275166 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,09,288 பேருக்கு பொங்கல் பரிசு திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 288 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதில், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 04179-222111 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →