ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ராமானுஜரின் 1003-ஆம் ஆண்டு ஜயந்தி விழா

DIN

ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், ராமாநுஜரின் 1003-ஆவது ஜயந்தி விழா, அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, ஆண்டாள் வாழித்திருநாமம், வாரணம் ஆயிரம் ஆகியவை பாராயணம் செய்து, சேவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, தீப ஒளி ஏற்றி, ராமாநுஜா் அருளிய எட்டெழுத்து மந்திரமான ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரம் 1008 முறை ஜபிக்கப்பட்டது.

உலக அமைதிக்காகவும் நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்துவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரத் துறையினா், காவல் துறையினா், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தாா் ஆரோக்கியத்துடன் வாழவும் வேண்டி பாராயணமும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

விழாவில் ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளையின் பொருளாளா் மோகன் சக்திவேல், வாழ்நாள் உறுப்பினா்கள் பேபி வெங்கடேசன், பவித்ரா, ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT