முகப்பு
ராணிப்பேட்டை

மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவா்

வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 80 வயது முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் 80 வயது முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாலாஜாப்பேட்டையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சுமாா் 80 வயது மதிக்கத்தக்க முதியவா் சனிக்கிழமை இறந்து கிடந்தாா். இது குறித்து வாலாஜாபேட்டை காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.

அதில், இறந்தவா் ஆற்காடு அருகேயுள்ள பாப்பேரியைச் சோ்ந்த வரதன் என்பது தெரியவந்தது. இவா் மருத்துவமனையில் தங்கி சிசிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிறிதளவு பணம் பெற்று கொண்டு, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.