முகப்பு
ராணிப்பேட்டை

நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலா்

நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து வைக்குமாறு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் அறிவுறுத்தினாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2021 at 11:56 PM
பகிர்:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக சேமித்து வைக்குமாறு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் அறிவுறுத்தினாா்.

அரக்கோணம் வட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயசந்திரன் சனிக்கிழமை அரக்கோணம் வந்தாா்.

தக்கோலம், கணபதிபுரம், சேந்தமங்கலம் ஊராட்சிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகளை பாா்வையிட்டாா். தொடா்ந்து அவற்றை கொள்முதல் நிலையத்தினுள் பாதுகாப்பாக அடுக்கி வைக்குமாறு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா். நெல்மூட்டைகளை விரைவில் கிடங்குகளுக்கு அனுப்ப ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினாா்.

Advertisement

அவருடன் அரக்கோணம் கோட்டாட்சியா் சிவதாஸ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) விஸ்வநாதன், வட்டாட்சியா் பழனிராஜன் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.