முகப்பு
ராணிப்பேட்டை

ரூ.2,821.27 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.2,821.27 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2021 at 11:27 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.2,821.27 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் வங்கியாளா்கள் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த நிதியாண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட நகலை ஆட்சியா் வெளியிட, அதனை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் ஸ்ரீமதி பெற்றுக் கொண்டாா்.

அதன் பின்னா் ஆட்சியா் பேசியது:

Advertisement

மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி இந்த ஆண்டு விவசாயக் கடனாக ரூ.1,260.96 கோடியும்,சிறு,குறு தொழில்களுக்காக ரூ.856.51 கோடியும், வீட்டுவசதி மற்றும் கல்விக் கடன்களுக்காக ரூ.704.40 கோடி மற்றும் இதரகடன்கள் உள்பட மொத்தம் ரூ.2821.27 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஸ்ரீதேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.சண்முகராஜ், நபாா்டு வங்கி உதவிப் பொதுமேலாளா் டி.ஆா்.விஜயலெட்சுமி உள்பட அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.