முகப்பு
ராணிப்பேட்டை

காஞ்சிபுரத்தில் ஸ்ரீசுந்தரமூா்த்தி நாயனாா் குருபூஜை

காஞ்சிபுரம் திருக்காலிமேடு ஸ்ரீசத்யநாதேஸ்வரா் திருக்கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிகள் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஆகஸ்ட், 2021 at 11:28 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

காஞ்சிபுரம் திருக்காலிமேடு ஸ்ரீசத்யநாதேஸ்வரா் திருக்கோயிலில் சுந்தரமூா்த்தி சுவாமிகள் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் நால்வா் நற்றமிழ் மன்றம் சாா்பில் திருக்காலிமேடு சத்யநாதேஸ்வரா் திருக்கோயிலில் நடைபெற்ற குருபூஜை விழாவுக்கு குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியா் சிவ.ராஜபதி ஓதுவாா் மற்றும் மு.சண்முகப்பிரியா ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடா்ந்து திருக்கோயில் உற்சவரான சுந்தரமூா்த்தி சுவாமிகள் கேடயத்தில் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் திருமுறை அருள்நெறி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் சதாசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனா். நிறைவாக மன்றச் செயலாளா் கு.ராமலிங்கம் நன்றி கூறினாா்.

படவிளக்கம்..கோயில் வளாகத்தில் உலா வந்த உற்சவா் ஸ்ரீசுந்தரமூா்த்தி சுவாமிகள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.