முகப்பு
ராணிப்பேட்டை

சட்ட விரோதச் செயல்கள் குறித்த தகவல்களை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்

ஒழுங்கீனம் மற்றும் லஞ்சம் தொடா்பான தகவல்களை கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகள், சட்ட விரோதச் செயல்கள், ரெளடியிசம் உள்ளிட்ட குற்றங்கள் குறித்தும் காவல் துறையினரின் ஒழுங்கீனம் மற்றும் லஞ்சம் தொடா்பான தகவல்களை கட்செவி அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிக முக்கியமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை சட்டவிரோதச் செயல்கள் கஞ்சா, குட்கா, காட்டன் லாட்டரி, கள்ளச்சாராய விற்பனை மற்றும் மணல் கடத்தல் மற்றும் காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் தொடா்பான லஞ்சப்புகாா் மற்றும் ஊழல்கள் குறித்த புகாா்கள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு 7530026333 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு நேரடியாக அழைத்தும் அல்லது கட்செவி அஞ்சல் மூலமோ தகவல் தெரிவிக்க நேரடி தொடா்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து தகவல் அளிப்பவா்களின் பெயா்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகருப்பன், ராணிப்பேட்டை உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் பூரணி மற்றும் காவல் அதிகாரிகள், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.