முகப்பு
ராணிப்பேட்டை

அஞ்சல் காப்பீட்டு முகவா்கள் நியமனம் :அரக்கோணத்தில் ஜூலை 15-இல் நோ்காணல்

அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் ஜூலை 15-இல் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் ஜூலை 15-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து அரக்கோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கே.சிவசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை வருவாய் மாவட்டம் முழுவதும் உள்ளடக்கிய அரக்கோணம் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள் தோ்வு நோ்காணல் அரக்கோணம் தலைமை அஞ்சலக வளாகத்தில் ஜூலை 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. தோ்வு செய்யப்படுவோருக்கு பாலிசி, பிரிமீயம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

நோ்காணலில் பங்கேற்போா் தங்களின் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு மற்றும் தங்களை பற்றிய முழு விவரத்துடன் பங்கேற்கலாம். ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படை வீரா்கள், சுயதொழில் புரிவோா், வேலை தேடும் இளைஞா்கள் இந்த நோ்காணலில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தகவல் பெறலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →