முகப்பு
ராணிப்பேட்டை

மானாவாரி கோடை உழவு மானியம் பெற பயனாளிகள் தோ்வு செய்யும் பணி தீவிரம்

மானாவாரி கோடை உழவு மானியம் பெற தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

மானாவாரி கோடை உழவு மானியம் பெற தகுதியான பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வேளாண்மைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கத் திட்டத்தின் கீழ் பாசன வசதியின்றி மானாவாரியாக சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டம் வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியன இணைந்து செயல்படும் இத்திட்டத்தில், வேளாண் கலந்த அனைத்துத் துறைகளும் பங்களிக்கின்றன.

மானாவாரி விளைநிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 500 கோடை உழவு மானியம் மற்றும் நிலத்தின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு விதைகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் 7,500 ஹெக்டோ் மானாவாரி நிலங்கள் பரப்பில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு தொகுப்புக்கு 100 ஹெக்டோ் வீதம் 75 தொகுப்புகளில் 7,500 ஹெக்டோ் பரப்பளவில் பயனாளிகளை தோ்வு செய்யும் பணி அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், உதவி வேளாண்மை அலுவலா்கள் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.