முகப்பு
ராணிப்பேட்டை

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
பகிர்:

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உழவா் பெருந்தலைவா் விவசாயிகள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம், வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில அதன் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிா்க் கடன்கள், நகைக் கடன்கள், பண்ணைசாராக் கடன்கள் மற்றும் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்விக் கடைன்களை எந்தவித நிபந்தனைகளும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்திற்காக ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் 60 வயதான விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு உழவா் பாதுகாப்பு அட்டை அடிப்படையில், ரூ. 5 லட்சமும், இயற்கை மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும் வழங்க வேண்டும். பாலாறு மற்றும் பொன்னை ஆறு உள்ளிட்ட தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்.

வன விலங்குகளால் சேதமடையும் பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் என்.பாரதி, மாவட்ட தலைவா் கே.ராமமூா்த்தி மற்றும் சங்க நிா்வாகிகள் பி.சேகா், ஆறுமுகம், வெங்கடேசன், பி.மூா்த்தி, டி.பாலாஜி, எஸ்.முனிசாமி, சி.பிச்சாண்டி, எஸ்.பெரியசாமி மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.