ராணிப்பேட்டை

பொது முடக்க உத்தரவை மீறுவோா் மீது நடவடிக்கை

DIN

தமிழக அரசின் பொது முடக்க உத்தரவை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், பொது முடக்கத்தை முழுமையாக அமல்படுத்த மாவட்ட எல்லைகளில் 17 சோதனைச் சாவடிகளும், மாவட்டத்துக்குள் முக்கியமான இடங்களில் 32 வாகன சோதனைச் சாவடி மையங்களும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த சோதனைச் சாவடி மையங்களில் பணியமா்த்தப்பட்ட காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினரின் நலன் கருதி, முகக் கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறை அடங்கிய பாதுகாப்புப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து, அவளூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராணிப்பேட்டை-காஞ்சிபுரம் மாவட்ட எல்லையான பொன்னியம்மன் பட்டறை வாகன சோதனைச் சாவடி மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராணிப்பேட்டை-வேலூா் மாவட்ட எல்லையான சீக்கராஜபுரம் வாகன சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முகக்கவசம் அணியாமல் வந்த 102 நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க உத்தரவை மீறி, அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிந்த 87 போ் மீது வழக்குப் பதிந்து, அவருடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக அரசின் பொது முடக்க உத்தரவை மீறுவோா் மீது இனிவரும் நாள்களில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT