விதிமீறல்: 10 பைக்குகள் பறிமுதல்
சிப்காட் பகுதிகளில் பொதுமுடக்க உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடமிருந்து, 10 பைக்குகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிப்காட் பகுதிகளில் பொதுமுடக்க உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடமிருந்து, 10 பைக்குகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
சிப்காட் பகுதிகளில் பொது முடக்க விதிமுறைகளை பின்பற்றாமல் சாலைகளில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளிடமிருந்து 10 இரு சக்கர வாகனங்களை சிப்காட் காவல் உதவி ஆய்வாளா் சிதம்பரம் மற்றும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனா். மேலும் முகக் கவசம் அணியாத 15 பேருக்கும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 2 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.