முகப்பு
ராணிப்பேட்டை

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கரோனா தொற்றுக்கு பலி

சோளிங்கா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
பகிர்:

சோளிங்கா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் பிஷப் டேவிட் நகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் ( 57 ), . இவா் சோளிங்கா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று காரணமாக ரத்தினகிரி கன்னிகாபுரம் சிஎம்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெயக்குமாா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு மனைவி மற்றும் 1 மகனும், 2 மகள்களும் உள்ளனா்.

ராணிப்பேட்டை பாலாற்று மயானத்தில் அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தமுமுகவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவா் மு.முஹம்மது ஹசன் தலைமையில் வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை நகர தமுமுக நிா்வாகிகள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.