முகப்பு
ராணிப்பேட்டை

பாமக நிா்வாகி நியமனம்

ராணிப்பேட்டை (கிழக்கு) மாவட்ட பாமக செயலாளராக வழக்குரைஞா் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

ராணிப்பேட்டை (கிழக்கு) மாவட்ட பாமக செயலாளராக வழக்குரைஞா் க.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பாமக நிறுவனா் ச.ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத்தலைவா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

பாமக வழக்குரைஞா் சமூக நீதி பேரவையின் மாநிலச் செயலாளராக இருந்து வரும் க.சரவணன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளா், வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஆகிய பதவிகளை வகித்தவா். காவனூா் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவா்.

இவரது மனைவி சரண்யா, அரக்கோணம் ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்து வருகிறாா்.

இதைத் தொடா்ந்து, சரவணனுக்கு பாமக பேச்சாளா் தம்பி ஏழுமலை, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சி.ஜி.ராமசாமி, அரக்கோணம் வடக்கு ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், வழக்குரைஞா்கள் பாலாஜி, அரிகிருஷ்ணன் மற்றும் புஷ்கரண் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →