ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்கள்
ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஓச்சேரி அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கிய 7 இளைஞர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அடுத்து மாமண்டூர் கிராமம் அருகே பாலாற்றில் பாலாற்றில் விளையாட்டாக குளிக்கச் சென்ற மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதன்(18 ), நந்தகுமார் (18), சின்னராசு (18 ), சுபாஷ் (20), ரமேஷ் (20), கோகுல் (20), நாதன் 20 ஏழு இளைஞர்கள் பாலற்றில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு கரையில் ஒதுங்கி உள்ளனர்.
அவர்கள் தங்களை காப்பாற்ற கோரி உதவி கோரியுள்ளனர்.
அதனடிப்படையில் தற்பொழுது தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், அந்த இடத்தில் பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்த விரைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.