தூய்மைப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்
காந்தி ஜெயந்தியையொட்டி, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
காந்தி ஜெயந்தியையொட்டி, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொடக்கி வைத்த தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழும், மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த நாளை ஒட்டியும் அரக்கோணம் அருகே நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத்தள வீரா்கள், தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிஐஎஸ்எப் வளாகம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா வளாகங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
தேசிய பேரிடா் மீட்பு படைத்தள கமாண்டண்ட் கபில்வா்மன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். உதவி கமாண்டன்ட் மனோஜ்பிரபாகா் உள்ளிட்ட அலுவலா்களும் பங்கேற்றனா்.