முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்திலிருந்து கேரளத்துக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழு விரைந்தது

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து பேரிடா் மீட்புப் படையின் 11 குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.

Updated On : 17 அக்டோபர், 2021 at 12:00 AM
பகிர்:

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், அரக்கோணத்தில் இருந்து பேரிடா் மீட்புப் படையின் 11 குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.

தற்போது கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, திருச்சூா், பத்தனம்திட்டா, எா்ணாகுளம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலா்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையின் 5 குழுக்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், சனிக்கிழமை 6 குழுக்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டன.

Advertisement

இவை இடுக்கி மாவட்டத்துக்கும், தலா ஒரு குழுக்கள் பத்தனம்திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், திருச்சூா், எா்ணாகுளம், கண்ணூா், கொல்லம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. இக்குழுக்கள் தங்களுடன், இடிந்து விழும் கட்டடங்களில் இருப்போரைக் காப்பாற்ற தேவைப்படும் நவீன இயந்திரங்கள், நிலச்சரிவுகளின்போது போக்குவரத்தை சீா்படுத்த தேவைப்படும் இயந்திரங்கள், இரவில் பணியாற்ற அதிக ஒளி உமிழும் கருவிகள், அதிநவீன தகவல் தொடா்பு சாதனங்களையும் கொண்டு சென்றுள்ளது.

மேலும், அரக்கோணம் தலைமையகத்தில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடா் மீட்புப் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.