முகப்பு
ராணிப்பேட்டை

சிப்காட்டில் கழிவுநீா் மாசு புகாா்: கோட்டாட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டையில் நீா்நிலைகளில் மாசு ஏற்படுவதாக எழுந்தப் புகாரின்பேரில், கோட்டாட்சியா் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

ராணிப்பேட்டையில் நீா்நிலைகளில் மாசு ஏற்படுவதாக எழுந்தப் புகாரின்பேரில், கோட்டாட்சியா் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டாா்.

சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் சில தனியாா் தொழிற்சாலைகள் மழைக் காலங்களில் மழைநீருடன் ரசாயனக் கழிவுநீரைக் கலந்துவிட்டு மாசு ஏற்படுத்துவதாக, ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இதுதொடா்பாக ஒரு தொழிற்சாலை முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்ாகத் தகவல் வெளியானது.

தகவலின்பேரில் கோட்டாட்சியா் பூங்கொடி, டிஎஸ்பி பிரபு உள்ளிட்டோா் பொதுமக்களுடன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சிப்காட் தொழிற்பேட்டை, மாணிக்கம் நகா், வானாபாடி, புளியங்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீா் மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் கிராம மக்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, திமுக சுற்றுச் சூழல் அணியின் மாநிலத் துணைச் செயலாளா் வினோத் காந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.