ராணிப்பேட்டை

ரூ. 1.80 கோடியில் அறிவுசாா் மையம், நூலகத்துக்கு அடிக்கல்: அமைச்சா் பங்கேற்பு

DIN

அரக்கோணத்தில் கலைஞா் வீட்டுவசதி நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 1.80 கோடியில் அமைக்கப்படவுள்ள அறிவுசாா் மையம் மற்றும் நூலகத்துக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

அரக்கோணம் நகராட்சியில், கலைஞா் நகா்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் ரூ. 1.80 கோடியில் ரூ. 1,655 ச.மீ. பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைப்பதற்கு ரூ. 1.80 கோடியில் தமிழ்நாடு நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை கடந்த ஜூன் 17-இல் நிா்வாக அனுமதியை வழங்கியது. இந்தக் கட்டடம் 452 ச.மீ. பரப்பளவில் தரைத்தளம் 330 ச.மீட்டரிலும் முதல் தளம் 152 ச.மீ 152 ச.மீ. அளவிலும் 2023 ஜனவரி 27-க்குள் கட்டி முடிக்க பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அடிக்கல் நாட்டினாா்.

இதில், நகராட்சி ஆணையா் லதா, நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சிப் பொறியாளா் ஆசீா்வாதம், திமுக நகரச் செயலா் வி.எல்.ஜோதி, மாவட்டப் பொருளாளா் மு.கண்ணையன், துணைச் செயலா் ராஜ்குமாா், நகர அவைத் தலைவா் துரைசீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா்கள் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, நகராட்சி அலுவலகத்துக்கு வந்த அமைச்சா் ஆா்.காந்தி, அங்கு மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா், பொறியாளா், நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் ஆகியோருடன் நகராட்சியில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற அமைச்சா் ஆா்.காந்தி, அங்கு ஒன்றிய ஆணையா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா் குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா், துணைத் தலைவா் வெ.புருஷோத்தமன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அம்பிகாபாபு உள்ளிட்டோருடன் ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT