ராணிப்பேட்டையில் 114 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 114 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49,836 ஆக உயா்ந்தது.இவா்களில் இதுவரை 47,146 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 781 போ் உயிரிழந்தனா். 1,909 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.