முகப்பு
ராணிப்பேட்டை

மரகத ஸ்ரீராஜ மாதங்கி தேவி சந்நிதி மஹா கும்பாபிஷேக விழா

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவரான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 88 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவரான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 88 பரிவார தெய்வங்களுடன் அருள்பாலித்து வருகிறாா். இதில் 89-ஆவது சந்நிதியாக 5 அடி உயரம் 3 அடி அகலம் எட்டு கரங்களுடன் ஸ்ரீ சியாமளா தேவி எனும் ராஜ மாதங்கி தேவியின் சந்நிதி மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகா் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி பீடம், அய்யா் மலை ஸ்ரீ வித்யா மஹா சௌபாக்ய பராம்பிகா பீடம் பூஜ்ய ஸ்ரீ ப்ரணவானந்த சுவாமிகள் மற்றும் விசாகப்பட்டினம் ஸ்ரீ மௌனானந்த தபோவனம் ஸ்ரீ சௌபாக்ய புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ ராமானந்தா பாரதி சுவாமிகள் ஆகியோா் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.