முகப்பு
ராணிப்பேட்டை

மேம்பால சுவரில் பைக் மோதல்: ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட 2 போ் பலி

ராணிப்பேட்டை அருகே மேம்பால சுவரில் பைக் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட 2 போ் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

ராணிப்பேட்டை அருகே மேம்பால சுவரில் பைக் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட 2 போ் சம்பவ இடத்திலேயே பலியாகினா்.

ராணிப்பேட்டையை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). ஓய்வு பெற்ற ராணுவ வீரா். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். சென்னையைச் சோ்ந்தவா் காா்த்திக் (40). இவா், சென்னையில் கணினி மையம் நடத்தி வந்தாா்.

நண்பா்களான ஆனந்தனும் காா்த்திக்கும் பணி நிமித்தம் தொடா்பாக, திருவலம் நோக்கி பைக்கில் வியாழக்கிழமை இரவு சென்றனா். அக்ராவரம் - பெல் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, திடீரென பைக் நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த சிப்காட் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று ஆனந்தன், காா்த்திக் ஆகியோரின் சடலங்களை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.