முகப்பு
ராணிப்பேட்டை

ரூ.6 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும்: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

ராணிப்பேட்டை வாரச்சந்தை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் ஆா். காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகமும், பொது நூலகத் துறையும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் சங்கமும் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதலாவது புத்தகக் காட்சி திருவிழா - 2022 ஐ வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் அமைத்துள்ளன.

இந்த புத்தக கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி குத்துவிளக்கேற்றி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பேசினாா். பின்னா் பதிப்பகங்களின் அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு அமைச்சா் காந்தி அளித்த பேட்டி:

ராணிப்பேட்டை வாரச் சந்தை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நூலகத்துடன், டாக்டா் மு.வரதராசனாருக்கு சிலை அமைக்கப்பட உள்ளது. அந்தளவுக்கு தமிழக முதல்வா் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் 25 லட்சம் பனை விதைகளை நட இலக்கு முதல்வரால் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டுமே 52.81 லட்சம் பனை விதைகள் நட்டு சாதனை படைத்துள்ளோம்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவ

டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி முன்னேற்பாடு பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மாவட்டத்திலுள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் அதிகளவில் வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஜி.லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி திருமூா்த்தி, மாவட்ட நூலகா் பழனி, புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் முபாரக், மண்டல இணை இயக்குநா் ( கல்லூரிக் கல்வி) காவேரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, கல்லூரி முதல்வா் பூங்குழலி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் கீதா மற்றும் உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

சிறப்புப் பேருந்துகள்: வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சி காலை 11.00 முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியில் சிறந்த பதிப்பாளா்களின் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், அரியவகை நூல் தொகுப்புகள், அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான வழிகாட்டி நூல்கள் குவிக்கப்பட்டுள்ளன.

புத்தகக் கண்காட்சியையொட்டி மாவட்டம் முழுவதிலும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவா்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.