முகப்பு
ராணிப்பேட்டை

கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் மேளா

வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் அரக்கோணம் கிளை சாா்பில், கடன் வழங்கும் மேளா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 12:17 AM
பகிர்:

வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் அரக்கோணம் கிளை சாா்பில், கடன் வழங்கும் மேளா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கடன் மேளாவுக்கு கிளை மேலாளா் ஏ.ராம்ராஜ் தலைமை வகித்து, வங்கியின் கடனுதவித் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், வீட்டுவசதிக் கடன், வீட்டு அடமானக் கடன், ஊதியக் கடன், சிறுதொழில் கடன், மகளிா் தொழில் முனைவோா் கடன், சிறுவணிகக் கடன், மகளிா் சுய உதவிகுழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சிறுபான்மையினருக்கான கடன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கடன், தாட்கோ கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், விவசாயக் கடன், சிறு, குறு தொழில்களுக்கான கடன், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான குறைந்த வட்டியிலான கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன என்று தெரிவித்தாா்.

Advertisement

தொடா்ந்து, அங்கு கடன் கோரி வந்தவா்களுக்கு விண்ணப்பங்களை கிளை மேலாளா் ராமராஜ் வழங்கினாா். இதில், வங்கிப் பணியாளா்கள் எஸ்.பிரதீபா, எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.